குடியரசு தலைவர் உரையுடன் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர்... பிரச்சனையை கிளப்ப தயாராகும் எதிர்க்கட்சிகள்!

 
பட்ஜெட்


இன்று ஜனவரி 31ம் தேதி பாராளுமன்றத்தில் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர்  தொடங்குகிறது. முதலில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் காலை 11 மணிக்கு உரையாற்ற உள்ளார். இதனைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறது. இந்த கூட்டத்தொடரில்  பட்ஜெட் மசோதாவையும் சேர்த்து மொத்தம் 16 சட்ட மசோதாக்கள்  தாக்கல் செய்யப்பட உள்ளன. அதில் மிக முக்கிய மசோதா, வக்பு சட்ட திருத்தம் ஆகும். ஏற்கனவே உள்ள முசல்மான் வக்பு சட்டத்தை திருத்தி புதிய வக்பு சட்ட திருத்தத்தை மத்திய பாஜக அரசு தாக்கல் செய்ய உள்ளது.

பட்ஜெட்


இஸ்லாமியர்களின் வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடங்களை அரசே நிர்வகிக்கும் என  இந்த சட்ட திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.  இந்த சட்டத்திருத்தம் அமலாகும் போது நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்படக்கூடும் என  எதிர்பார்க்கப்படுகிறது.  அடுத்து, ரயில்வே திருத்த சட்ட மசோதா, வங்கி சட்டம் திருத்தம் மசோதா உட்பட  பல மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.
வக்பு வாரிய சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவரும் மசோதா, நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு உட்பட்டது. 14 திருத்தங்களுடன், இந்த மசோதாவிற்கு கூட்டுக்குழு ஒப்புதல் அளித்தது மட்டுமின்றி, எதிர்க்கட்சிகள் முன்வைத்த பல பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இன்று தாக்கல் செய்யப்படவுள்ள மசோதாவில், வக்பு வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டாயமாக பதிவு செய்வது உட்பட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. எதிர்க்கட்சிகள் இந்த மசோதாக்கள் மற்றும் பிரச்னைகள் குறித்து தங்கள் கருத்துகளை வலியுறுத்தி, அரசியல் விவாதத்தில் பங்கேற்க தயாராக உள்ளன.

பட்ஜெட்


UGC விதிகளில் மாற்றம் செய்யப்படுவதற்கு எதிராகவும், ஆளுநர்களின் அத்துமீறல், மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு, சாதிவாரி கணக்கெடுப்பு, தேர்தல் ஆணைய புதிய விதிமுறைகள், மீனவர்கள் மீதான தாக்குதல், இந்தி திணிப்பு ஆகியவற்றை குறித்து பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதிக்க கோரியுள்ளோம் எனவும் திரு.டி.ஆர்.பாலு  தெரிவித்துள்ளார். நாளை 2025-26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை 8வது முறையாக தாக்கல் செய்ய உள்ளார்.
 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web