’எருமை மாடா டா நீ’.. பொது மேடையில் உதவியாளரை இழிவாக பேசிய அமைச்சர்.. வீடியோ வைரல்!
தஞ்சாவூரில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உதவியாளரை தரக்குறைபாக பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தஞ்சாவூரில் வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மேடையில் பேச தயாராக இருந்தார். தனது உரையை ஆரம்பித்த அமைச்சர், “அனைவருக்கும் எனது நன்றியையும் மரியாதையையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறிவிட்டு, திடீரென்று திரும்பி, “பரசுராமன் எங்கே...” என்று கூறிவிட்டு, மேடைக்கு வந்த உதவியாளரை, பார்த்து எருமை மாடாடா நீ.. பேப்பர் எங்கே...” என்று ஆவேசமாக திட்டினார்.
பொது நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தனது உதவியாளரை இழிவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!