மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து.. 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த சோகம்!

 
மகாராஷ்டிரா விபத்து

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள லோஹேகானில் இருந்து மஹாத் பகுதியில் உள்ள பிர்வாடிக்கு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பேருந்தில் 32 பேர் சென்று கொண்டிருந்தனர். இன்று காலை 9.30 மணியளவில் ராய்காட் மாவட்டத்தில் உள்ள தம்ஹினி மலைப்பகுதிக்கு அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்தது.

இந்த பயங்கர விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 27 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதைக் கண்டு காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ்

அதிகாரிகளின் கூற்றுப்படி, பேருந்து ஒரு கூர்மையான வளைவில் கீழ்நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறுகின்றனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web