கொடூரம்... ஆட்டு மந்தைக்குள் பாய்ந்த பேருந்து.. 146 ஆடுகள் பலியான சோகம்!

 
தெலுங்கானா ஆடு

தெலுங்கானா மாநிலம் தன்வாடா பகுதியில் வசித்து வருபவர் மல்லேஷ். அங்கு அவரது மாமா உட்பட அந்த பகுதியை சேர்ந்த சிலர் 600 ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தனர். இவர்கள் நேற்று காலை புதுக்கல் நெடுஞ்சாலையில் ஆடுகளை ஓட்டி சென்றனர். அப்போது, ​​நெடுஞ்சாலையில் கடும் பனிமூட்டம் நிலவியதால், அந்த வழியாக வந்த ஆம்னி பஸ் ஒன்று ஆட்டு மந்தைக்குள் புகுந்தது.

இதில், 100 மீட்டர் தூரத்துக்கு ஆடுகள் இழுத்துச் செல்லப்பட்டு, 100க்கு மேற்பட்ட ஆடுகள்  பலியாகின.இதை பார்த்த பஸ் டிரைவர் அங்கிருந்து தப்பியோடினார். இந்த விபத்தில் 146 ஆடுகள் இறந்ததால் சாலை முழுவதும் ரத்த வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் ஆடு உரிமையாளர்கள் சுமார் 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான  ஆடுகளை இழந்துள்ளனர்.

போலீஸ்

இதையடுத்து உரிமையாளர்கள் நஷ்ட ஈடு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web