1500 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து.. 4 பேர் பலியான சோகம்!

 
உத்தரகாண்ட் விபத்து

உத்தரகாண்ட் மாநிலம் பீம்டல் அருகே பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 24க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அல்மோராவில் இருந்து ஹல்த்வானிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து உத்தரகாண்ட் மாநிலம் பீம்தால் நகருக்கு அருகே கட்டுப்பாட்டை இழந்து 1500 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்புப் பணியில் காவல்துறை, SDRF குழுக்கள், தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் ஈடுபட்டுள்ளனர். கயிறுகள் மூலம் பள்ளத்தாக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

ஹல்த்வானியில் இருந்து விபத்து நடந்த இடத்திற்கு பதினைந்து ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. 4 பேர் உயிரிழந்த நிலையில், 24 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web