தொழிலதிபர் சுட்டுக் கொலை... பெரும் பரபரப்பு!
ஜார்க்கண்டில் தொழிலதிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலியானவர் மக்பூல் ஷேக் (45) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பகூர் முஃபாசில் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள லகான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.

காவல் நிலைய அதிகாரி கௌரவ் குமார் தெரிவித்ததாவது: “இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு நடந்தது. மக்பூல் ஷேக்கை லாலன் ஷேக் சுட்டுக் கொன்றார். உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார். காயமடைந்த மக்பூல், மேற்கு வங்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சென்றவுடன் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது,” என்றார்.

பஞ்சாயத்து தேர்தலில் வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையில் நீண்டநாள் தகராறு இருந்து வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. லாலன் ஷேக் வீட்டருகிலுள்ள தேநீர் கடையிலிருந்து மக்பூல் வீடு திரும்பும் போது இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
