செப்.23ல் விக்கிரவாண்டியில் த.வெ.கழகத்தின் முதல் மாநாடு.. அனுமதி கோரி புஸ்ஸி ஆனந்த் மனு!
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நடிகர் விஜய் ரசிகர் மன்றமாக இருந்ததை மக்கள் இயக்கமாக மாற்றி கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தாெடங்கினார். கடந்த மாதம் 29ம் தேதி கட்சியின் கொடியினை அறிமுகப்படுத்தினார். கடந்த வாரம் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.
அடுத்த கட்டமாக விழுப்புரம் மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் மாநில அளவிலான கட்சியின் முதல் மாநாட்டை மிக பிரம்மாண்டமாக நடத்த நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து, செப்டம்பர் 23ஆம் தேதி மாநாடு நடத்துவதற்கான அனுமதி கேட்டு கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று கடிதம் வழங்கியுள்ளார்.
மேலும், விக்கிரவாண்டி அடுத்த வி. சாலை கிராமத்தில் மாநாடு நடத்துவதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாகவும், இந்த மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய் கலந்து கொள்ளவுள்ளதால் பாதுகாப்பு வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட கூடுதல் எஸ்.பி. திருமால், இது குறித்து உயர் அலுவலர்கள் கவனத்துக்கு கொண்டு செல்வதாகத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த புஸ்ஸி ஆனந்த், மாநாடு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த அனைத்து தகவல்களையும் கட்சித் தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!