2050ல் உலகின் அதிக முஸ்லிம்கள் வசிக்கும் நாடாக இந்தியா மாறும்... ஆய்வறிக்கையில் தகவல்!
![முஸ்லிம் மக்கள்தொகை](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/e58539e34f53afdda5ce77cf3688ae19.jpg)
இன்னும் 25 வருடங்கள் தான். 2050ம் ஆண்டில் உலகின் அதிக முஸ்லிம் ஜனத்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும் என்று ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பியூ ரிசர்ச் சென்டர் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், இந்தோனேசியாவை (311 மில்லியன்) ஓவர்டேக் செய்து, 2050ல் இந்திய அதிக முஸ்லிம் மக்களைக் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
'உலக மதங்களின் எதிர்காலம்: மக்கள்தொகை வளர்ச்சி கணிப்புகள்' என்கிற தலைப்பில் பியூ ரிசர்ச் செண்டர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2050ல் பாகிஸ்தான் உலகின் 2வது பெரிய முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட நாடாக (273 மில்லியன்) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானைத் தொடர்ந்து, 2010ல் அதிக முஸ்லீம் மக்கள்தொகையைக் கொண்டிருந்த இந்தோனேஷியாவும், 2050ல் 257 மில்லியன் முஸ்லிம் மக்களுடன் 3வது இடத்திற்கு முன்னேறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உலகின் 3வது பெரிய மதக் குழுவாக இந்துக்கள் மாறுவார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது. 2050ம் ஆண்டில், இந்தியாவில் 310 மில்லியன் முஸ்லிம்கள் வசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது மக்கள் தொகையில் 11% ஆகும். இந்தியா தொடர்ந்து மிகப்பெரிய இந்து மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் என்றும் இது 1.03 பில்லியனாக அதிகரிக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
வளர்ந்து வரும் முஸ்லிம் மக்கள்தொகைக்கு பெரும்பாலும் இளம் வயது மற்றும் அதிக கருவுறுதல் விகிதங்கள் காரணம் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிக கருவுறுதல் விகிதம் காரணமாக, இந்தியாவில் முஸ்லிம் மக்கள் தொகையும் வேகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2010ல், மொத்த மக்கள் தொகையில் 14.4% முஸ்லிம்கள் இருந்தனர். இது 2050ல் 18.4% ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா, நைஜீரியா மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் உள்ள முஸ்லிம் மக்கள்தொகையை விட இந்தியாவின் இந்து மக்கள் தொகை அதிகமாக இருக்கும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அதே சமயம் 2050ல் இந்தியாவின் கிறிஸ்தவ மக்கள் தொகை 2.3 சதவிகிதமாக குறையும் என்றும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மற்றொரு அறிக்கையில், உலகில் வேகமாக வளர்ந்து வரும் மதக் குழு முஸ்லிம்கள் என்று கூறியுள்ளது. உலக மக்கள்தொகையை விட முஸ்லிம் மக்கள் தொகை வேகமாக வளரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கிறிஸ்தவத்திற்கு அடுத்தபடியாக இஸ்லாம் 2வது பெரிய மதமாக உள்ள நிலையில் தற்போதைய மக்கள்தொகை போக்கு தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் இறுதியில் முஸ்லிம்களின் எண்ணிக்கை கிறிஸ்தவர்களை விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் பெரும்பாலான முஸ்லிம்கள் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் வாழ்கின்றனர். இது சுமார் 72% ஆகும். இந்தோனேசியா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் மக்கள் தொகையே உலகளாவிய முஸ்லிம் மக்கள்தொகை ஆகும். தற்போது உலகிலேயே அதிக முஸ்லிம் மக்கள்தொகையைக் கொண்டுள்ளதாக இந்தோனேசியா இருந்து வருகிறது. இது 2050ல் இந்தியா 310 மில்லியன் முஸ்லிம்களுடன் இந்தோனேசியாவை விஞ்சும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!