கலிபோர்னியா காட்டுத்தீ.. ரூ.1.29 லட்சம் கோடி இழப்பை கண்ட அமெரிக்கா!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் அமைந்துள்ளது. நகரத்தின் மையத்தில் ஹாலிவுட் பகுதி உள்ளது. முன்னணி திரைப்பட நிறுவனங்களும் அவற்றின் திரைப்பட நகரங்களும் அங்கு அமைந்துள்ளன. இதன் காரணமாக, லாஸ் ஏஞ்சல்ஸ் ஹாலிவுட் திரைப்படத் துறையின் தலைநகராகக் கருதப்படுகிறது. கடந்த 7 ஆம் தேதி, லாஸ் ஏஞ்சல்ஸின் பாலிசேட்ஸ் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது.
மலைப்பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பைன் மரங்கள் காரணமாக காட்டுத் தீ வேகமாகப் பரவியது. தற்போது, பாலிசேட்ஸ், ஈடன், ஹர்ஸ்ட் மற்றும் லிடியா பகுதிகளில் தீ கட்டுப்பாடில்லாமல் பரவி வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சுமார் ஒரு கோடி மக்கள் வசிக்கின்றனர். காட்டுத் தீ பரவும் பகுதிகளில் இருந்து நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுவரை காட்டுத் தீயில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலர் கடுமையான தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ அமெரிக்காவிற்கு சுமார் ரூ.1.29 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தனியார் வானிலை நிறுவனம் இந்த மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது. இருப்பினும், அமெரிக்க அரசு அதிகாரிகள் இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!