மாணவிகள் விடுதி கழிவறையில் கேமரா.. 300 ஆபாச வீடியோக்கள் பதிவு செய்த கொடூரம்.. பகீர் பின்னணி!
தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மல்லாரெட்டி தற்போது எம்எல்ஏவாக உள்ளார். இவர் மெட்சல் நகரில் உள்ள பொறியியல் கல்லூரியை நடத்தி வருகிறார். இதில் மாணவிகளுக்காக தனி விடுதி உள்ளது. இதில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் விடுதியில் மாணவிகளின் குளியலறையில் கேமராவில் ஆபாச வீடியோக்கள் பதிவாகியதாக புகார் எழுந்தது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் கல்லூரி விடுதி வளாகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மெட்சல் போலீசார் அங்கு வந்து மாணவிகளை சமாதானம் செய்தனர். அப்போது, சுமார் 300 மாணவிகளின் ஆபாச வீடியோக்களை பதிவு செய்துள்ளதாகவும், அவை சமூக வலைதளங்களில் வெளியானால், அதற்கு எம்எல்ஏ மல்லாரெட்டிதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் மாணவிகள் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். பின்னர், விடுதி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். 12 ஊழியர்களின் செல்போன்களை பறிமுதல் செய்த விசாரணையில், விடுதி சமையலறை ஊழியர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து சமையல் ஊழியர்கள் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!