கண்ணாடிக்குள் கேமிரா... அயோத்தி ராமர் கோவிலுக்குள் புகைப்படம் எடுத்தவர் கைது!
![கண்ணாடி](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/3eef04eec6af7218076cd2383939f528.png)
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் அயோத்தியில் பிரசித்தி பெற்ற ராமர் திருக்கோவில் அமைந்துள்ளது. 2024 ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடந்து முடிந்த நிலையில் அயோத்தி ராமர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்த கோவிலுக்குள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒருவர் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்ற நிலையில் அவர் கண்ணாடியில் கேமரா வைத்து புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த கூலிங் கிளாஸின் விலை மட்டும் ரூ.50.000 என்று கூறப்படுகிறது.
மேலும் அவர் கூலிங் கிளாஸில் கேமரா வைத்து போட்டோ எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக அவரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!