ஈரோடு கிழக்கில் பிரச்சாரம் ஓய்ந்தது... மாஸ் காட்டிய திமுக... களத்தில் நாம் தமிழர் எடுபடுமா?!

இன்று மாலை 6 மணியுடன் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுதினம் பிப்ரவரி 5ம் தேதி டெல்லி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், திமுகவும், நாம் தமிழர் கட்சியும் நேரடியாக களத்தில் மோதுகின்றன. பிரதான கட்சிகளான அதிமுக, பாஜக போன்றவை பின்வாங்கிய நிலையில் அதிமுக, பாஜக வாக்குகள் யாருக்கும் செல்லும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சீதாலட்சுமி ஆகியோர் உட்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
திமுக சார்பில் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சு.முத்துசாமி தலைமையில் திமுகவினர் தொகுதிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து பிரச்சாரம் செய்தனர். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பாகவே திமுக வேட்பாளர் பிரச்சாரத்தை துவங்கியிருந்தார். இந்தி பேசுபவர்களிடம் இந்தியில் பிட் நோட்டீஸ் அச்சடித்துக் கொடுத்து வாக்கு சேகரிக்கும் அளவுக்கு திமுக இந்த தேர்தலை சிரத்தையாக எதிர்கொண்டது.
பெரியார் மண்ணியில் வாய்க்கு வந்தபடியெல்லாம் பெரியாரை வசைப்பாடி பிரச்சாரம் மேற்கொண்டார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தொடர்ந்து ஈரோட்டில் முகாமிட்டு தினமும் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பேசி வந்தார்.
இந்த இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களும் ஆட்டோ, சரக்கு வாகனங்களில் தொகுதி முழுக்க சென்று வாக்குகள் கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர். இன்று பிப்ரவரி 3ம் தேதி மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் வெளியூர்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் வரும் 5ம் தேதி நடைபெறுகிறது. தொகுதியில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2.27 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். இத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உட்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பிரச்சாரம் இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!