’போட்டிக்கு நாங்க வரலாமா’.. மிஸ்டர் ராம்நாடு.. ஆணழகன் போட்டியில் கலந்து கொண்ட சிறுவர்கள்!
மாவட்ட அளவிலான அமெச்சூர் ஆணழகன் போட்டி தொண்டியில் நடந்தது. இதில் பங்கேற்ற சிறுவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள தொண்டியில் ராமநாதபுரம் மாவட்ட அமெச்சூர் ஆண்கள் சங்கம் சார்பில் 21வது மிஸ்டர் ராம்நாடு போட்டி நடந்தது. போட்டியை மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை மாவட்ட அலுவலர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார்.
இந்நிலையில், 10 வயதுக்குட்பட்டோருக்கானோர் போட்டியில் கலந்து கொண்ட குழந்தைகள் தங்களது உடல் திறனை வெளிப்படுத்தி பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் பதக்கம் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து 17 வயது ஆணழகன் போட்டி நடந்தது. இதில் 10 பேர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு மகிழ்ந்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது...
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!