கனடா பிரதமர் ராஜினாமா... .பரபரக்கும் உலக அரசியல்!

 
கனடா

 கனடா பிரதமர்  53 வயது ஜஸ்டின் ட்ரூடோ.  2015ம் ஆண்டு முதல் 9 ஆண்டுகள் கனடாவின் பிரதமராக  ஜஸ்டின் செயல்பட்டு வந்தார். அதேநேரத்தில்  லிபரல் கட்சியின் தலைவராகவும் அவர் செயல்பட்டார். இதனிடையே, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் செல்வாக்கு அந்நாட்டு மக்களிடையே பெருமளவு குறைந்து வந்தது.  அத்துடன் சொந்த கட்சிக்குள்ளும் செல்வாக்கு குறைந்தது.  

கனடா

கனடா பொருளாதார ரீதியில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.  அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்க உள்ள நிலையில் கனடா மீது அதிக அளவில் வரி விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும்  நிலையில், நாட்டின் பொருளாதார சூழ்நிலை, சொந்த கட்சிக்குள் கடும் எதிர்ப்பு, பொதுமக்களிடம் ஆதரவு குறைவு உட்பட பல்வேறு காரணங்களால் கனடா பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ நேற்று ராஜினாமா செய்துள்ளார்.  

கனடா

அத்துடன்  லிபரல் கட்சியின் தலைவர் பதவியையும் ட்ரூடோ ராஜினாமா செய்தார். அதேவேளை, கனடாவின்   புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும்வரை இடைக்கால பிரதமராக தொடர்ந்து செயல்படுவதாக ட்ரூரோ அறிவித்துள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web