’கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற வாய்ப்பில்லை'.. ஜஸ்டின் ட்ரூடோ திட்டவட்டம்!
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். ஜஸ்டின் ட்ரூடோ தனது சொந்தக் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சியின் ஆதரவை இழந்த பிறகு இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் கனடாவில் தேர்தல்கள் நடைபெற உள்ளன. கனடாவில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், அமெரிக்காவின் அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் 51வது மாகாணத்தில் கனடா இணைவது குறித்து பேசி வருகிறார். கனேடிய மக்கள் அமெரிக்காவில் சேர விரும்புவதாகக் கூறிய டிரம்ப், வரிகள் குறைக்கப்படும், வர்த்தக பற்றாக்குறை இருக்காது, கனடா பாதுகாப்பாக இருக்கும் என்றும் கூறினார். அமெரிக்கா ஒரு சிறந்த நாடாக மாறும் என்றும், நாங்கள் ஒன்றுபடுவோம் என்றும் அவர் கூறினார்.
டிரம்பின் கருத்துகள் குறித்து மௌனம் கலைத்த ஜஸ்டின் ட்ரூடோ, கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக, ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது, டொனால்ட் டிரம்ப் சொல்வது ஒருபோதும் நடக்கப்போவதில்லை. கனடியர்கள் கனேடிய குடிமக்களாக இருப்பதில் பெருமைப்படுகிறார்கள். நாங்கள் அமெரிக்கர்கள் அல்ல. மக்களை திசை திருப்பவே டிரம்ப் இப்படிப் பேசுகிறார் என்று நான் நினைக்கிறேன். ”
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!