மக்கள் பயன்பாட்டுக்கு வரும் புற்றுநோய் தடுப்பூசி.. ரஷ்ய அதிபர் அதிரடி அறிவிப்பு!

 
ரஷ்யா தடுப்பூசி

புற்றுநோய்க்கு எதிராக ரஷ்யா தனது சொந்த mRNA தடுப்பூசியை உருவாக்கியுள்ளது, இது நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என்று ரஷ்ய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. புற்றுநோய்க்கான தடுப்பூசிகளை உருவாக்கும் ரஷ்ய விஞ்ஞானிகளின் இறுதிப் பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும், அது விரைவில் நோயாளிகளுக்கு கிடைக்கும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

புதின்

சில மாதங்களுக்கு முன், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் புதின், "புற்றுநோய் தடுப்பு மருந்து, இம்யூனோமோடூலேட்டரி மருந்துகளை உருவாக்கி உள்ளோம். இறுதிக்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் அவை மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என கூறியுள்ளோம். இது மக்களுக்கு கிடைக்கும் நேரடி சிகிச்சையை விட, புற்றுநோயிலிருந்து மக்களைப் பாதுகாக்கும்.

பல ஆண்டுகள் கடந்தும், பல தொழில்நுட்பங்கள் வந்தாலும், மாறாத குணப்படுத்த முடியாத நோய் புற்றுநோய். பல ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளுக்குப் பிறகும் புற்றுநோய்க்கு முழுமையான மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. சில மருந்துகள் புற்றுநோய்க்கு எதிராக உறுதியளித்தாலும், அதை முழுமையாக குணப்படுத்த முடியவில்லை. இப்போது வரை, புற்றுநோய்க்கு எதிரான முக்கிய சிகிச்சையாக கீமோதெரபி உள்ளது.

கடந்த ஆண்டு கூட, அமெரிக்காவில் புற்றுநோய்க்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட மருந்து, சோதனைகளில் புற்றுநோயாளிகளை குணப்படுத்தியுள்ளது. சோதனையில் கலந்து கொண்ட புற்றுநோயாளிகளும் இந்த மருந்தை உட்கொண்ட பிறகு குணமடைந்தது உலக கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், மற்றொரு ஆய்வு புற்றுநோய்க்கு இதே போன்ற மருந்தை கண்டுபிடித்துள்ளது.

ரைஸ் பல்கலைக்கழகம், டெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகம் மற்றும் டெக்சாஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் நிபுணர்களைக் கொண்ட கூட்டு ஆராய்ச்சிக் குழு புற்றுநோய்க்கு எதிரான அற்புதமான கண்டுபிடிப்பை செய்துள்ளது. புற்றுநோய் செல்களை அகற்றும் முறையை கண்டுபிடித்துள்ளனர். சில மூலக்கூறுகளை ஒளியால் தூண்டி அதிர்வுறும் மருந்தை கண்டுபிடித்து, அந்த அதிர்வை பயன்படுத்தி புற்றுநோய் செல்களை  அழிக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web