கார் குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு.. சிரியாவில் பதற்ற நிலை!

 
சிரியா


 
சிரியாவின் மன்பிஜ் நகரில் நேற்று பிற்பகல்  வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியது. இதில் அருகே இருந்த வேனில் சென்ற 15 விவசாயிகள் உடல் சிதறி பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், அவர்களில் 5 பேர் தற்போது உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதனால் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.


துருக்கிய எல்லையிலிருந்து சுமார் 30 கிமீ  தொலைவில் அமைந்துள்ள மன்பிஜில் நடந்த இந்த குண்டுவெடிப்புக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை. மேலும், இந்த குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்தர்களில் பெண்களும் தான் அதிகம் எனக் கூறப்படுகிறது.
இவர்களைத் தவிர, 10க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்துள்ளனர், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.  டிசம்பர் மாதம் ஜனாதிபதி பஷார் அசாத் பதவி நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து, வடகிழக்கு அலெப்போ மாகாணத்தில்   மன்பிஜில் வன்முறை தொடர்ந்து நடந்து வருகிறது. ஒரு மாதத்திற்குள் மன்பிஜில் நடந்த 7 வது கார் குண்டுவெடிப்பு இதுவாக கருதப்படுகிறது.  

கார் குண்டு வெடிப்பு


துருக்கிய ஆதரவு பெற்ற சிரிய தேசிய இராணுவம் என அழைக்கப்படும் பிரிவுகளுக்கும், அமெரிக்க ஆதரவு பெற்ற குர்திஷ் தலைமையிலான சிரிய படைகளுக்கும் இடையே சண்டை நடந்த பகுதியில், ஒரு மாதத்திற்குள் நடந்த 7வது கார் குண்டுவெடிப்புச் சம்பவமும் இது என்பது குறிப்பிடத்தக்கது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web