கோயம்பேடு மார்க்கெட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.. பதறிய பொதுமக்கள்!

 
கோயம்பேடு மார்க்கெட்
கோயம்பேடு மார்கெட்டில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆயுத பூஜையையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகாலை முதல் பூஜை பொருட்கள், பழங்கள், பூக்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் சேப்பாக்கம், கிருஷ்ணசாமி சாலையை சேர்ந்த பழ வியாபாரியான இளவரசன் (52) என்பவர் தனது காரில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்தார். பின்னர் பழ மார்க்கெட் வளாகத்திற்குள் காரை நிறுத்தி விட்டு அங்குள்ள கடைக்கு பழங்கள் வாங்க சென்றார்.

திருமழிசைக்கு மாறுகிறதா கோயம்பேடு மார்க்கெட்?' - வியாபாரிகள் சொல்வதென்ன?!  #SPOTVISIT| Is Koyembedu market is shifting to Thirumazhisai - Vikatan

அவர் சென்ற சிறிது நேரத்தில் காரில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. பின்னர் கார் முழுவதும் தீ மளமளவென் பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பழ மார்க்கெட்டில் இருந்த வியாபாரிகள், பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்ததும் கோயம்பேடு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

கோயம்பேடு பழ மார்க்கெட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

எனினும் கார் முழுவதும் எரிந்து சேதமானது. காரின் அருகே மற்ற வாகனங்கள் எதுவும் இல்லாததால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை. கார் எப்படி தீப்பற்றியது. என்பது குறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் கோயம்பேடு மார்க்கெட் பகுதி இன்று அதிகாலை பரபரப்பாக காணப்பட்டது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புகள்!

From around the web