லாரி மீது கார் மோதி கோர விபத்து... சம்பவ இடத்திலேயே மருத்துவர் பலி.. பெண் மருத்துவர் கவலைக்கிடம்!

இவர்களது கார் முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்த விசாரணையில், உயிரிழந்தவர் பாச்சுபள்ளியைச் சேர்ந்த டாக்டர் ஜஷ்வந்த் என்பதும், படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர் எல்பி நகரைச் சேர்ந்த டாக்டர் பூமிகா என்பதும் தெரிய வந்தது. இருவரும் எல்பி நகரில் உள்ள காமினேனி மருத்துவமனையில் மருத்துவர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர்.
ஐதராபாத் நகரின் புறநகரில் உள்ள நர்சிங்கியில் உள்ள கானாபூரில் இன்று இந்த விபத்து நேரிட்டுள்ளது. அவர்களது கார் முன்னால் சென்றுக் கொண்டிருந்த டிரக் மீது மோதியதில் விபத்து நேர்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மருத்துவர்கள் இருவரும் ஜன்வாடாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு, ஹைதராபாத்திற்கு தங்களது காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். கார் கானாபூரை அடைந்ததும், காரை ஓட்டி வந்த ஜஷ்வந்த், வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்றுக் கொண்டிருந்த லாரி மீது மோதியதாகத் தெரிகிறது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் பலத்த காயம் அடைந்த டாக்டர் பூமிகா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து நார்சிங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!