பைக் மீது கார் மோதி பயங்கர விபத்து.. கணவன் - மனைவி பரிதாபமாக பலியான சோகம்!

 
ராஜேந்திரன் - சுமதி

நத்தம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பாலப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் (58), சுமதி (56). பாலமேட்டில் உள்ள உறவினர்களை சந்தித்துவிட்டு இருவரும் இருசக்கர வாகனத்தில் நத்தம் திரும்பிக் கொண்டிருந்தனர்.

கோமணம்பட்டி பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, ​​எதிரே வந்த கர்நாடகாவை சேர்ந்த கார் மீது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து ராஜேந்திரனை மீட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

பள்ளி ஆசிரியரின் செக்ஸ் தொல்லை காரணமா?! கரூர் மாணவி தற்கொலை குறித்து தாய் பேட்டி!

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web