3 அடி மனிதருக்கு கார் லைசென்ஸ் !! ஆச்சர்யமூட்டும் புகைப்படங்கள்!!

 
3 அடி மனிதருக்கு கார் லைசென்ஸ் !! ஆச்சர்யமூட்டும் புகைப்படங்கள்!!

இந்தியாவிலேயே கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டுவதற்கான லைசன்ஸ் பெற்ற முதல் குள்ள மனிதர் என்ற சாதனையை தெலுங்கானவை சேர்ந்த கட்டிபள்ளி சிவலால் படைத்துள்ளார். உயரத்தில் 3 அடியாக இருந்தாலும், தன்னம்பிக்கையில் தொடமுடியாத உச்சத்தில் நின்று தன்னைப்போல் இருக்கும் மற்றவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வழிகாட்டியாக சிவலால் உயர்ந்துள்ளார்.

3 அடி மனிதருக்கு கார் லைசென்ஸ் !! ஆச்சர்யமூட்டும் புகைப்படங்கள்!!

தெலுங்கானா மாநிலம், குகத்பள்ளியில் வசித்து வருபவர் கட்டிபள்ளி சிவலால். அவருக்கு வயது 42. தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வரும் சிவலாலுக்கு சாலைகளில் மற்றவர்களை போல வாகனங்களை ஓட்டிச்செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவரது உயரம் 3 அடி என்பதால் காரில் அமர்ந்து அவரால் சாதரண மனிதர்கள் போல ஓட்ட முடியாது. இதை காரணம் காட்டி பலரும் அவருக்கு டிரைவிங் கற்றுக்கொடுக்க மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் தனியார் டிரைவிங் ஸ்கூல் ஒன்றின் உதவியால் சிவலால் டிரைவிங் கற்றுக்கொண்டதுடன் லைசன்ஸ் டெஸ்டிலும் தேர்வாகியுள்ளார். இதனையடுத்து நாட்டிலேயே வாகன ஓட்டிகளுக்கான லைசன்ஸ் பெற்ற முதல் குள்ள மனிதர் என்ற பெருமையை சிவலால் பெற்றுள்ளார்.

3 அடி மனிதருக்கு கார் லைசென்ஸ் !! ஆச்சர்யமூட்டும் புகைப்படங்கள்!!

இதுகுறித்து பகிர்ந்து கொண்ட சிவலால், ‘மூன்று அடி உயரமுள்ள நான், இன்று நாட்டிலேயே முதல் முறையாக லைசன்ஸ் பெற்றுள்ளேன். அதன் அடிப்படையில் தெலுங்கு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் லிம்கா சாதனையளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளேன். இப்போது எனது மனைவிக்கும் கார் ஓட்ட சொல்லிக் கொடுக்கிறேன். ஐதராபாத்தை சேர்ந்த கார் வடிவமைப்பாளர் எனக்கு ஏற்றார்போல் காரில் சில மாற்றங்களை செய்து கொடுத்துள்ளார்.

வாகனம் ஓட்டக் கற்றுக்கொள்ளும் போது நிறைய சிரமங்கள் பட்டேன். அமெரிக்காவில் மூன்று அடி உயரமுள்ள நபர் வாகனம் ஓட்டு வீடியோ எனக்கு இன்ஸ்பைரேஷனாக இருந்தது. அவரை போலவே நானும் டிரைவிங் கற்றுக்கொணடேன். நம்பிக்கை இல்லை என்றால் என்னால் டிரைவிங் கற்றிருக்க முடியாது’ என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

From around the web