வெடித்து சிதறிய சரக்கு விமானம்... 3 பேர் பலி, 11 பேர் காயம்!
அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் புறப்பட்ட சில நிமிடங்களில் சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி பெரும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. லூயிஸ்வில் முஹம்மது அலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட UPS 2976 என்ற மெக்டொனல் டக்ளஸ் MD-11 ரக விமானமே விபத்தில் சிக்கியது.
🇺🇸✈️💥 A UPS Airlines cargo plane with flight number UPS2976 (a McDonnell Douglas MD-11F) crashed shortly after takeoff from Louisville Muhammad Ali International Airport (Kentucky, USA). #USA pic.twitter.com/LVfreVv4yB
— 🔰 Military-News (@MilitaryNewsEN) November 4, 2025
புறப்பட்ட உடனேயே விமானத்தில் இயந்திர கோளாறு அல்லது தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சரக்கு விமானமான இதில் மூன்று விமானப் பணியாளர்கள் மட்டுமே இருந்ததாக UPS நிறுவனம் உறுதி செய்துள்ளது. விமானம் தரையில் விழுந்தபோது ஏற்பட்ட தீ விபத்து ஒரு மைல் தூரத்திற்குப் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்ததுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர் என கென்டக்கி ஆளுநர் ஆண்டி பெஷியர் உறுதி செய்துள்ளார். விபத்துக்குப் பிறகு லூயிஸ்வில் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, அருகிலுள்ள மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணத்தை கண்டறிய தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும், மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகமும் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
