ரன்வேயில் தரையிறங்கி திடீரென கடலுக்குள் பாய்ந்த சரக்கு விமானம்... 2 பேர் பலி!
இப்படி எல்லாம் கூட விபத்து நேரிடுமா என்று அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார் ஹாங்காங் மக்கள். நேற்று துபாயில் இருந்து புறப்பட்ட போயிங் 747 என்கிற சரக்கு விமானம், ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றடைந்தது. விமானம் பாதுகாப்பாக ரன்வேயில் இறங்கியதும், தரையிறங்கிய அடுத்த சில நொடிகளிலே அதிர்ச்சி காத்திருந்தது. ரன்வேயில் தரையிறங்கியதும், திடீரென பாதையை விட்டு விலகி அருகிலுள்ள கடலுக்குள் பாய்ந்து மூழ்க தொடங்கியது.
இந்த கார்கோ விமானம் துபாயிலிருந்து புறப்பட்டு ஹாங்காங் விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. ரன்வேயில் பக்கவாட்டில் சரிந்து கடல் நீரில் பாய்ந்து பாதியாக மூழ்கியதாக விமானத்துறையினர் தெரிவித்துள்ளது. இதில் விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். ஆனால், ரன்வே அருகே பணிபுரிந்துக் கொண்டிருந்த விமான நிலைய பணியாளர்கள் இருவர் விமானம் சரிந்து கடலுக்குள் பாய்ந்த போது சிக்கி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கியுள்ளதாக ஹாங்காங் விமானத்துறை அறிவித்துள்ளது. அதிகப்படியான விமான போக்குவரத்து நடைபெறும் வடக்கு ரன்வே தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், தெற்கு மற்றும் மத்திய ரன்வேகளை இயக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
