அதிர்ச்சி... ஆந்திராவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்து உடனடியான சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசாரும், அதிகாரிகளும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Andhra Pradesh: A goods train derailed in Palnadu district on Monday night, disrupting traffic. Trains including Tirupati Special, Narsapur, and Kacheguda were halted at Miryalaguda. Several superfast trains were diverted via Vijayawada pic.twitter.com/95KYvldfrd
— IANS (@ians_india) January 7, 2025
சரக்கு ரயில் தடம் புரண்டதால் திருப்பதி, நர்சாபூர், கச்சிகுடா உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் அனைத்தும் மிர்யாலகுடாவில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த சரக்கு ரயில் சிமென்ட் ஏற்றுவதற்காக சென்று கொண்டிருந்த போது தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பற்றி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!