பகீர் வீடியோ... சரக்கு வாகனம் கவிழ்ந்து 5 பேர் உடல் நசுங்கி பலி!

 
சத்தீஸ்கர்

 சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தார் மாவட்டத்தில்   சரக்கு வாகனம்  கவிழ்ந்ததில்  விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்தனர். இதுகுறித்த  அம்மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜக்தல்பூரில்  சந்தமேட்டா கிராமத்திற்கு அருகே சுமார் 45 பேரை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானது" எனக் கூறியுள்ளார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  இந்த சம்பவம் தொடர்பாக விபத்து மருத்துவ அதிகாரி திலிப் காஷ்யப்  , "மாலை 4:30 மணியளவில் விபத்து பற்றிய தகவல் எங்களுக்கு கிடைத்தது.

சத்தீஸ்கர்

இதுவரை காயமடைந்த 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  மேலும் ஒருவர் வரும் வழியில் உயிரிழந்தார்” எனக் கூறினார்.இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணைகள்   நடைபெற்று வருவதாகவும் மருத்துவ அதிகாரி திலிப் காஷ்யப் தெரிவித்தார்

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web