சென்னை மேம்பாலத்தில் நிறுத்திய கார்களை அபராதம் விதித்து அப்புறப்படுத்திய போலீசார்!

 
சென்னை மேம்பாலத்தில் நிறுத்திய கார்களை அபராதம் விதித்து அப்புறப்படுத்திய போலீசார்!

சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 2 நாட்களுக்கும் அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக சென்னை தி.நகர், வேளச்சேரி போன்ற பகுதிகளில் வாகன ஓட்டிகள் மேம்பாலத்தில் தங்களது கார்களைப் பாதுகாப்பாக நேற்று மாலை முதலே நிறுத்தி வைக்கத் துவங்கினார்கள். இந்நிலையில், மேம்பாலத்தில் நிறுத்தி வைத்திருந்த கார்களுக்கு போலீசார் அபராதம் விதித்து அப்புறப்படுத்தினர்.

சென்னை மேம்பாலத்தில் நிறுத்திய கார்களை அபராதம் விதித்து அப்புறப்படுத்திய போலீசார்!

வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னைக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’ விடப்பட்டுள்ளது. அதிகனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் தங்களது கார்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றதை நேற்று பார்க்க முடிந்தது. வேளச்சேரி, கொடுங்கையூர், மாதவரம், கோயம்பேடு, தி.நகர், அண்ணாநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் சாலையோரத்தில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

கடந்த காலங்களில் பெய்த பெருமழையால் ஏராளமான வாகனங்கள் நீரில் மூழ்கி பெரிய அளவில் சேதம் அடைந்தன. எனவே மீண்டும் அதுபோன்ற நிலை வந்து விடக்கூடாது என்பதற்காக சென்னை நகரில் பல்வேறு இடங்களில் வாகனங்கள் மேடான பகுதியில் நேற்று மாலை முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

மேம்பாலத்திலும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தி சென்றதால் வாகன நெரிசல், பாதுகாப்பு கருதி போக்குவரத்து போலீசார் அந்த கார்களை அப்புறப்படுத்தினர். வாகனங்களை நிறுத்த வந்த பொது மக்களிடமும் வேறு இடத்தில் நிறுத்துங்கள், மேம்பாலங்களில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

சென்னை மேம்பாலத்தில் நிறுத்திய கார்களை அபராதம் விதித்து அப்புறப்படுத்திய போலீசார்!

இதனால் சில இடங்களில் போக்குவரத்து போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வேளச்சேரி, சைதாப்பேட்டை, பெரம்பூர் உள்ளிட்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்றிருந்த வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

பெரிய பெரிய அபார்ட்மெண்ட்களில் வசிப்பவர்கள், தங்களது இருசக்கர வாகனங்களை லிப்ட் மூலமாக 4வது, 5வது மாடிக்கு கொண்டு சென்று பால்கனியிலும், வீட்டிற்குள் வரவேற்பறையிலும் நிறுத்தி வைத்தனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!

From around the web