நடிகை ஹன்சிகா மீது வழக்குப்பதிவு... ரசிகர்கள் அதிர்ச்சி!
நடிகை ஹன்சிகா மோத்வானி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து 10 வருடங்களாக நடிகையாக வலம் வந்துக் கொண்டிருந்த நடிகை ஹன்சிகா, கடந்த 2022ல் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் சோஹைல் கத்தூரியாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானியின் மனைவி முஸ்கான் நான்சி ஜேம்ஸ் என்பவர் நடிகை ஹன்சிகா மீதும், அவருடைய அம்மா மோனா மோத்வானி மீதும் புகார் தெரிவித்துள்ளார். புகாரில் இவர்கள் இருவருடன் சேர்ந்து தனது கணவர் தன்னைக் கொடுமைப்படுத்தியதாக கூறியுள்ளார்.
மும்பை அம்போலி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள இந்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளில் கீழ் ஹன்சிகா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2020ல் பிரசாந்த்-முஸ்கான் இருவரின் திருமணம் நடைபெற்றது. குடும்ப டார்ச்சர் காரணமாக 2022 முதல் கணவரிடம் இருந்து பிரிந்து தனியே வாழ்ந்து வருகிறார் முஸ்கான் நான்சி ஜேம்ஸ். இந்நிலையில் தற்போது தனது கணவரின் குடும்பத்திற்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இடையில் தனது கணவருடன் முஸ்கான் சமரசமாக செல்ல விரும்பி பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் அதற்கு ஹன்சிகா மற்றும் அவரது அம்மா இருவரும் முட்டுக்கட்டை போட்டதாகவும் கூறியுள்ளார். அதனால் தான் இப்படி ஒரு புகாரை முஸ்கான் அளித்திருக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!