சாதிவாரி கணக்கெடுப்பு.. அதிர்ச்சி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்.. ஷாக்கில் எதிர்க்கட்சியினர்!
இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதற்கு மத்திய பாஜக அரசு சம்மதிக்கவில்லை. இதனால் மத்திய அரசுக்கு ராகுல் காந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனுடன் சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என ராகுல் காந்தி கூறி வருகிறார்.
இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு தொடர்பான விசாரணை நேற்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த அரசுக்கு உத்தரவிட முடியாது.
மேலும், சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அரசின் செயல்பாடுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறியுள்ளது. மேலும், இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாபஸ் பெறுமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்தது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!