ஜாதி ரீதியாக மாணவர்களை பேசிய பேராசிரியை இடமாற்றம்... கும்பகோணம் கல்லூரி மீண்டும் திறப்பு!
Aug 30, 2024, 17:05 IST
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலை கல்லூரி முதுநிலை தமிழ்த்துறை பேராசிரியை ஜெயவாணி ஸ்ரீ, முதுநிலை தமிழ்த்துறை 2ம் ஆண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, ஜாதி ரீதியாகவும், மாணவிகளை தரக்குறைவாகவும் பேசியதாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாணவர்கள் கடந்த 15ம் தேதி முதல் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம், சாலை மறியல் என்று தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த நிலையில், கல்லூரி காலவரையின்றி மூடப்படுவதாக முதல்வர் மாதவி அறிவித்தார்.
இந்நிலையில், தமிழ்த்துறை உதவி பேராசிரியை ஜெயவாணி ஸ்ரீ, ஈரோடு மாவட்டம், தாளவாடியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பேராசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து கல்லூரி வழக்கம் போல் செயல்படும் என முதல்வர் மாதவி அறிவித்தார். அதன்படி கல்லூரி வழக்கம் போல் இயங்கியது. மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு வகுப்பில் கலந்து கொண்டனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
From
around the
web