பகீர் சிசிடிவி.. வகுப்பறையில் இருந்து வெளியே வந்து 3வது மாடியில் இருந்து குதித்த மாணவன்!

 
ஆந்திரா மாணவன்

3வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் உள்ள நாராயணா கல்லூரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நெற்று காலை, கல்லூரியில் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது, ​​தனது நண்பருடன் அமர்ந்திருந்த மாணவர் ஒருவர், ஆசிரியரிடம் கூட சொல்லாமல் திடீரென வகுப்பறையை விட்டு வெளியேறி, 3வது மாடியில் இருந்து குதித்தார்.


இந்தக் காட்சிகள் வகுப்பறையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. அதில், வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போதே மாணவர் வெளியேறுவதைக் காணலாம். தடுப்புச் சுவரை நோக்கி நடந்து சென்ற மாணவர், திடீரென அதன் மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். என்ன நடந்தது என்று பார்க்க அவரது வகுப்பு தோழர்களும் அறையை விட்டு வெளியேறினர். மாணவரின் தற்கொலைக்கான காரணம் இன்னும் வெளியாகாத நிலையில், மாணவரின் அருகில் இருந்த நண்பரிடம் அவர் ஏதாவது சொன்னாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web