சென்னையில் கொண்டாட்டம்... இன்று முதல் களைக்கட்டும் உணவுத் திருவிழா!
Dec 20, 2024, 06:13 IST
சென்னையில் கொண்டாட்டம்... இன்று முதல் சென்னை மெரீனா கடற்கரையில் டிசம்பர் 24ம் தேதி வரை உணவுத் திருவிழா நடைபெறுகிறது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தரமான, சத்தான, ஆரோக்கியமான, பாரம்பரிய உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.
சுய உதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் தரமான உணவுகள், முன்னணி உணவகங்களின் உணவு வகைகளின் தரமும் அதற்கு இணையாக சுவையும், தரமும் நிறைந்த உணவுகளை முறையான பயிற்சி பெற்று சுகாதாரமான முறையில் தயாரிக்கின்றனர். சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருவதை அனைவரும் அறிந்திட வேண்டும்.
இந்த நோக்கத்தை மக்களிடையே கொண்டு செல்லவும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவுத் திருவிழா சென்னையில் இன்று 20.12.2024 முதல் 24.12.2024 வரை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
From
around the
web