ராத்திரி முழுக்க செல்போனில் கடலை.. ஆத்திரத்தில் மனைவியை வெட்டி கொன்ற 3வது புருஷன்!

 
கொலை

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூரில்  கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தலைமறைவான 3வது கணவரை போலீசார் தேடி வருகின்றனர். மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் காவேரிபுரத்தை சேர்ந்தவர் கவிதா (31), ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். கவிதாவுக்கு அகிலன் (12), தர்ஷித் (8) என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு பாலவாடியை சேர்ந்த அருணாச்சலம் (29) என்பவரை 3வது முறையாக திருமணம் செய்து கொண்டார்.

சொந்த சகோதரனை அடித்தே கொலை செய்த கொடூர அக்கா!! பிணம்

அருணாச்சலம் கவிதா கொளத்தூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். ஆனால், குடும்பத் தகராறு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கவிதா கோவையில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றார். நேற்று காலை கோவை சென்ற அருணாச்சலம், தனது மாமியார் வீட்டிற்கு சென்று கவிதாவை சமாதானம் செய்து கொளத்தூருக்கு அழைத்து வந்தார். கவிதா நேற்று இரவு முழுவதும் வேறு ஒருவருடன் செல்போனில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

கவிதா வேறு ஒருவருடன் பழகியதால் ஆத்திரமடைந்த அருணாச்சலம், கொளத்தூர் சிவசக்தி நகர் பகுதியில் சாலையில் நடந்து சென்ற கவிதாவை சரமாரியாக வெட்டினார். இதில் கவிதா தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கொளத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோசடி வழக்கில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கொளத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web