குறித்த நேரத்தில் ஜிஎஸ்டி வரி செலுத்திய 54,439 பேருக்கு பாராட்டு சான்றிதழ்

 
குறித்த நேரத்தில் ஜிஎஸ்டி வரி செலுத்திய 54,439 பேருக்கு பாராட்டு சான்றிதழ்

சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தி 4 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, ஜிஎஸ்டி செலுத்தியதில் கணிசமான பங்களிப்பை அளித்தவர்கள், குறித்த நேரத்தில் ஜிஎஸ்டி தாக்கல் செய்த 54,439 பேருக்கு மத்திய அரசு பாராட்டு சான்றிதழ் வழங்கியது. தமிழகத்தில் 5,589 பேருக்கும், புதுச்சேரியில் 47 பேருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

மொத்த உணவுதானிய உற்பத்தி 305.44 மில்லியன் டன்னாக அதிகரிக்கும் :

தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட 2020-21 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) தற்காலிக மதிப்பீடுகளின்படி, விவசாயத்தின் மொத்த மதிப்பு கூட்டு (ஜி.வி.ஏ) 3.6 சதவீத வளர்ச்சியைக் காட்டியுள்ளது, இது ஊரகபகுதிகளில் சிறந்த நுகர்வுகளின் வாய்ப்பைக் குறிக்கிறது.

2020-21ம் பயிர் ஆண்டில் உணவு தானியத்தின் மொத்த உற்பத்தி 2.7 சதவீதம் அதிகரித்து 305.44 மில்லியன் டன் என்ற புதிய சாதனை படைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், டிராக்டரின் உள்நாட்டு விற்பனை 2020-21ம் ஆண்டில் 27 சதவீதம் அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று இந்தாண்டு இயல்பாக இருக்கும் என்ற முன்னறிவிப்பும், ஊரக வருவாயை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எளிதாக தொழில் செய்யும் விதிமுறை அமலாக்கம்:

எளிதாக தொழில் செய்யும் சீர்திருத்தத்தை அமல்படுத்தியதற்காக, 2020-21ம் நிதியாண்டில், 20 மாநிலங்கள் ரூ.39,521 கோடி கூடுதலாக கடன் பெற அனுமதி வழங்கப்பட்டது.தமிழகம் உள்ளிட்ட 20 மாநிலங்கள் எளிதாக தொழில் செய்யும் சீர்திருத்தத்தை அமல்படுத்தியுள்ளன.

From around the web