இன்று தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

 
இன்று தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும். ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

நாளை செப் 15ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும். ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள், மற்றும் சேலம்,நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

செப்16ம் தேதி கோவை, மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழையும். ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வரை வடகடலோர மாவட்டங்களில் காற்று வீசக் கூடும் . இதனால் மீனவர்கள் இப்பகுதிக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி, பாம்பன் , எண்ணூர் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web