வைரல் வீடியோ... அறுவைச்சிகிச்சைக்கு பிறகு அதிபர் டிஸ்சார்ஜ்!
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா. இவர் அக்டோபரில் 19ம் தேதி தலைநகர் பிரேஸிலியாவில் உள்ள அதிபர் மாளிகையில் திடீரென தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் படுகாயம் உண்டானது.இதனைத் தொடர்ந்து அவருக்கு மூளையில் ரத்த உறைதல் பாதிப்பால் கட்டி உருவாகியிருந்தது. இந்நிலையில், அவருக்கு சா பாலோ நகரில் ஒரு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. ஒரே வாரத்தில் 2 அறுவைச்சிகிச்சைகள் செய்யப்பட்டன. இந்நிலையில் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின.
Agradeço por cada oração e palavra de conforto que recebi nos últimos dias. Janjinha me repassou todos os recados. Peço que fiquem tranquilos. Estou firme e forte! Andando pelos corredores com Marcos Stavale, o neurocirurgião responsável pelo meu procedimento, conversando… pic.twitter.com/b4mlpy8L07
— Lula (@LulaOficial) December 13, 2024
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வீடியோ ஒன்றை அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில், அறுவைசிகிச்சைக்குப் பின் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, மருத்துவமனையில் நடைபயிற்சி மேற்கொண்ட காட்சிகள் வெளியாகின.மேலும் அவர் எந்தச் சிரமமும் இல்லாமல் மருத்துவருடன் சேர்ந்து அதிபர் நடைபயிற்சி மேற்கொண்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதேநேரத்தில், அவருடைய உடல் நலனைத் தொடர்ந்து கண்காணிக்கும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் அவர் தொடர்ந்து பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.டிஸ்சார்ஜ்க்குப் பின் பேசிய லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, “நான் இப்போது வீட்டிற்குச் செல்கிறேன். எனக்கு இப்போது எந்தப் பிரச்சனையும் இல்லை. நிச்சயமாக நான் குணமாகிவிட்டேன். இனி, நான் என்னை நன்றாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். நான் உயிரிழக்கப் போகிறேன் என ஒருபோதும் நினைக்கவில்லை, ஆனால் நான் பயந்தேன். இனி, சில கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும். பல பிரேசிலியர்களைப்போல இந்த ஆண்டு இறுதி விடுமுறைக்கு நான் கடற்கரைக்குச் செல்ல மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!