5 மாநில ஆளுநர்கள் மாற்றம் ... குடியரசுத் தலைவர் திடீர் உத்தரவு!

 
திரௌபதி முர்மு


இந்தியாவில்  5 மாநிலங்களுக்கு  ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆளுநர் நியமனம் குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை தரப்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “ கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு மாற்றப்பட்டு  பீகார் ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒடிசா ஆளுநராக மிசோரம் ஆளுநர் ஹரிபாபு கம்பம்படி, மத்திய முன்னாள் இணை அமைச்சர் வி.கே.சிங், மிசோரம் ஆளுநராக நியமனம், மணிப்பூர் ஆளுநராக அஜய்குமார் பல்லா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த உத்தரவு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார்.

திரவுபதி முர்மு

 ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸ் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, மிசோரம் ஆளுநராக உள்ள ஹரிபாபு, ஒடிசாவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.  தற்போது, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் பொறுப்பேற்கும் நாள் முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும்” என குடியரசு தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.  

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web