வைகை உட்பட தென்மாவட்டங்களுக்கான ரயில் சேவையில் மாற்றம்... அக்.28 வரை பராமரிப்பு பணிகள்!
வைகை எக்ஸ்பிரஸ் உட்பட இன்று முதல் அக்டோபர் 28ம் தேதி வரையில் தென் மாவட்டங்களில் நடைபெறும் பராமரிப்பு பணிகளின் காரணமாக சில முக்கிய ரயில்களின் சேவைகள் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரி வினோத் தெரிவிக்கையில், “செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்: மதுரை ரெயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் வருகிற 16, 17, 18 மற்றும் 22ம் தேதிகளில் செங்கோட்டையில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

நாகர்கோவில் – மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் கன்னியாகுமரி – ஹவுரா எக்ஸ்பிரஸ் வருகிற 23 மற்றும் 26ம் தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்பட உள்ளன.
குருவாயூர் – சென்னை எக்ஸ்பிரஸ்: வருகிற 15, 16, 17 மற்றும் 21, 22ம் தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
சென்னை எழும்பூர் – மதுரை வைகை எக்ஸ்பிரஸ்: வருகிற 25ம் தேதி சென்னையில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு வழியில் ஒரு இடத்தில் 40 நிமிடங்கள் நிறுத்தப்படும். 28-ந்தேதியில் 30 நிமிடங்கள் நிறுத்தப்படும்.

சென்னை எழும்பூர் – தூத்துக்குடி சிறப்பு விரைவு ரெயில்: வருகிற 28ம் தேதி சென்னையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு வழியில் ஒரு இடத்தில் 110 நிமிடங்கள் நிறுத்தப்படும். பயணிகள் அடுத்த கட்ட நடவடிக்கைகளை பராமரிப்பு பணிகளின் காரணமாக முன்னறிவிப்பாக திட்டமிட்டு பயணம் செய்ய வேண்டியது முக்கியம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
