மனைவிகளை மாற்றி உல்லாசம்.. பரவலாகும் கலாச்சார சீர்கேடு சம்பவங்கள்.. அதிர்ச்சி பின்னனி!
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஒரு வினோதமான நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பணக்காரர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பணக்காரர்கள் தங்கள் மனைவிகளுடன் ஜோடியாக இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள். குலுக்கல் முறையில் தங்கள் மனைவிகளைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்லாமல், இரவு முழுவதும் அவர்களுடன் உல்லாசமாக இருப்பார்கள். ஜோடிகளை மாற்றும் இந்த வினோத விளையாட்டு தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த விவகாரம் வெளியில் தெரிய வந்ததையடுத்து, இது தொடர்பாக பலரை போலீசார் கைது செய்தனர்.
மனைவிகளை மாற்றும் இந்த விளையாட்டு இன்னும் முடியவில்லை. ECR இல் ஒரு பண்ணை வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டு, தம்பதிகளை மாற்ற ரகசிய விருந்து நடத்தப்படுகிறது. சென்னையைத் தொடர்ந்து கோவை சரவணம்பட்டியிலும் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. போலீசார் விசாரிக்க ஆரம்பித்தபோது, இதற்கெல்லாம் காரணம் ஒரு பெண் என்பது தெரியவந்தது. கேரளாவில், வாட்ஸ்அப் குரூப்பில் 1000 ஜோடிகள் குரூப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். கேரளா மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருக்கும் திருமணமாகாதவர்களும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
திருமணமாகாதவர்கள் மாற்றான் மனைவியுடன் உல்லாசமாக இருக்க விரும்பினால், அதற்கு கூடுதல் பணம் வசூலிக்கப்படும். இதில் சிக்கிய ஏழைப்பெண் ஒருவர் தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்தபோதுதான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெங்களூரில் இதேபோன்ற சம்பவம் நடந்தது. பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இதுபோன்ற கலாச்சார சீர்கேடு போன்ற சம்பவம் ஆரம்பத்திலேயே துண்டிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!