கவின் ஆணவக் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்... 83 சாட்சிகளிடம் விசாரணை முடிந்தது!
நெல்லை ஐ.டி. பொறியாளர் கவின் கொலை வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் விரிவான விசாரணை நடத்தி, 83 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
நெல்லை கே.டி.சி.நகர் பகுதியில் ஜூலை 27ம் தேதி தூத்துக்குடியைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் கவின் (25) என்பவர் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் என்ற இளைஞரால் கொலை செய்யப்பட்டார். சுர்ஜித்தின் அக்காவுடன் காதலில் இருந்த கவினிடம், அந்த உறவை முடிக்க வலியுறுத்திய சுர்ஜித், கோபத்தின் உச்சத்தில் அரிவாளால் தாக்கி கொலை செய்தார்.

சம்பவத்துக்குப் பிறகு சுர்ஜித் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். பின்னர், அவரை நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து, சுர்ஜித்தின் தந்தை உதவி சார்பு காவல் ஆய்வாளர் சரவணனும், உறவினர் ஜெயபாலனும் கைது செய்யப்பட்டனர்.
இந்த மூவரும் தற்போது பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ளனர். ஜாமீனுக்காக சரவணன், ஜெயபாலன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் நீதிமன்றத்தால் இதற்கு முன் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தன.

சிபிசிஐடி அதிகாரிகள் கடந்த 80 நாட்களாக தீவிர விசாரணை நடத்தி, 83 சாட்சிகளின் வாக்குமூலங்களையும் 32 முக்கிய ஆவணங்களையும் சேகரித்துள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டு, நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
மூன்றாவது முறையாக சரவணன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் நேற்று நீதிபதி ஹேமா அவர்களால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், கவின் கொலை வழக்கில் விசாரணை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
