லோக்கல் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பு.. புதிதாக திறக்கப்பட்ட சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட மக்கள்!

 
சுங்கச்சாவடி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரியமங்கலம் பகுதியில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் புதியதாக திறக்கப்பட்ட சுங்கச்சாவடியில் 20 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள வாகனங்களுக்கு சுங்க கட்டண வரி விலக்கு ஏற்படுத்தித் தர வேண்டும் என வாகன உரிமையாளர்கள் சுங்கச்சாவடி அலுவலகத்தில் வாகனங்களை நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 

உள்ளூர் வாகனங்களுக்கும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இதனால் உள்ளூர் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது இந்நிலையில்,  20 கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் அனைத்து  வாகனங்களுக்கும் சுங்க கட்டண வரி விலக்கு அளிக்க வேண்டும் என டாட்டா ஏசி வாகன உரிமையாளர்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கம் காவல் ஆய்வாளர் செல்வராஜ் வாகன உரிமையாளர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு முறையான ஆவணங்களை சமர்ப்பித்தவுடன் உரிய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில்  ஈடுபட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த பின் வாகன உரிமையாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web