காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு... அலறியடித்து வீடுகளில் தஞ்சம் புகுந்த மக்கள்!

 
காட்டு யானை

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிப் பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டு யானை ஒன்று, சாலையில் நின்றிருந்த பொதுமக்களைத் துரத்தியதால் மக்கள் அலறியடித்து ஓடி வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூடலூர் நகராட்சிப் பகுதியில் முகாமிட்டுள்ள இந்தக் காட்டு யானை, தினமும் 27-ஆம் மைல், கே.கே.நகர், கெவிப்பாரா, கோத்தர் வயல் உள்ளிட்டப் பகுதிகளில் உலா வருகிறது. வீடுகளுக்கு அருகே பயிரிடப்படும் வாழை, பாக்கு மரங்கள் மற்றும் பயிர்களைத் தின்று பழகிவிட்டதால், யானை அடிக்கடி ஊருக்குள் சுற்றி வருகிறது. வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினாலும், மீண்டும் மீண்டும் அது ஊருக்குள் நுழைந்து விடுகிறது.

யானை

நேற்று முன்தினம் இரவு 9.50 மணியளவில் மேல் கூடலூர் ஓ.வி.எச். சாலையில் திடீரென நடந்து வந்த யானையைக் கண்ட பொதுமக்கள் வீடுகளுக்குள் ஓடினர். வாகன ஓட்டிகள் வந்த வழியே திரும்பிச் சென்றனர்.

தனியார் எஸ்டேட்டுக்குள் நுழைந்த யானை, மறுபுறம் செல்ல வழி இல்லாததால் சிறிது நேரத்தில் வந்த வழியாகத் திரும்பி வந்துள்ளது. அப்போது, சாலையில் மக்கள் நிற்பதைக் கண்ட யானை, திடீரெனப் பிளிறியவாறு அவர்களைத் துரத்தியது. இதனால் பொதுமக்கள் அலறியடித்தபடி ஓடி, தங்கள் வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

யானை

இது குறித்து அப்பகுதி மக்கள், காட்டு யானை ஊருக்குள் வருவது தொடர் கதையாக இருப்பதால், அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவோ அல்லது முதுமலைக்குக் கொண்டு செல்லவோ வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!