சென்னை பிப்ரவரி 1ம் தேதி முதல் மெட்ரோ ரயிலில் சுற்றுலா அட்டைகள் நிறுத்தம்… பயணிகள் அதிர்ச்சி!

சென்னையின் பொதுப்போக்குவரத்து சேவைகளில் முண்ணனியில் இருப்பது மெட்ரோ ரயில்கள் தான். இந்நிறுவனம் தற்போது பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சுற்றுலா அட்டை நிறுத்தப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சுற்றுலாஅட்டை (1நாள் சுற்றுலா அட்டை மற்றும் 30 நாள் சுற்றுலா அட்டை) பிப்ரவரி 1ம் தேதி முதல் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அனைத்து பயணிகளுக்கும் தடையற்ற மற்றும் எளிமையான பயணங்களை வழங்கி வருகிறது. சுற்றுலா அட்டைகளை இனி பயன்படுத்த முடியாது என்றாலும், பயணிகள் தங்கள் பயணத் தேவைகளுக்கு டிஜிட்டல் பயணச்சீட்டு முறைகள், QR குறியீடு அடிப்படையிலான பயணச் சீட்டுகள், ஒற்றை பயண டோக்கன்கள் மற்றும் தேசிய பொது போக்குவரத்து அட்டை உட்பட மாற்று பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோவில் தொடர்ந்து பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பொது போக்குவரத்து அட்டை இப்போது MTC பேருந்துகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு தடையற்ற பயண அனுபவத்தை வழங்கி வருகின்றன. எங்கள் பயணிகளின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் புரிதலுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மெட்ரோ பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை சிறப்பாகப் பூர்த்தி செய்வதற்கும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முழுமுயற்சி எடுத்து வருவதாக அறிவித்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!