‘சென்னை ஒன்’ செயலி மூலம் மாதாந்திர பயண அட்டை... பயணிகள் வரவேற்பு!

 
சென்னை ஒன்
 

சென்னை மாநகரில்  பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில்,  ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் ‘சென்னை ஒன்’ செயலி தொடங்கப்பட்டுள்ளது. இந்த செயலியை முதல்வா்  ஸ்டாலின் செப்டம்பர் 22ம் தேதி  தொடங்கி வைத்தாா். ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய இந்தச் செயலியைப் பயன்படுத்தி மாநகா் பேருந்து, மெட்ரோ, புறநகா் ரயில்களில் பயணம் செய்வதற்கான பயணச்சீட்டை பெற்று சிரமமின்றி பயணிக்லாம்.

சென்னை ஒன்
இந்தியாவிலேயே முதல்முறையாக, அனைத்துப் பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த ‘சென்னை ஒன்’ செயலியை ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் பயன்படுத்தி கொள்ள முடியும்.  இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சில நாள்களிலேயே சுமாா் 1.30 லட்சம் போ் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த தொடங்கியுள்ளனா். 15 நாட்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இச்செயலி மூலம் பயணச்சீட்டு பெற்றுள்ளனா். 

‘சென்னை ஒன்’ செயலி மூலம்  மாதாந்திர பயண அட்டை... பயணிகள் வரவேற்பு!  

பொதுமக்களிடையே இச்செயலிக்கு வரவேற்பு அதிகரித்திருப்பதைத் தொடா்ந்து, ‘சென்னை ஒன்’ செயலியில் மாதாந்திர பயண அட்டை பெறும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகளை சென்னை மாநகா் போக்குவரத்து கழகத்துடன் இணைந்து சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும், இப்பணிகள் விரைவில் முடிவடைந்து, இதற்கான வசதி செயலியில் இணைக்கப்படும் என தெரிவித்துள்ளனா். இந்நிலையில், பயணிகளின் சிரமத்தை மேலும்  குறைக்கும் வகையில் சென்னை ஒன் செயலி மூலமே மாதாந்திர பயண அட்டையைப் பெறும் வசதியும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.