சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை 8 வழிச்சாலையாக மாறுகிறது!
தமிழகத்தில் தென்மாவட்டங்களுக்கான போக்குவரத்து எப்போதும் பிசியாகவே இருக்கிறது.மக்களின் தேவைகளின் அடிப்படையில் 4 வழு தேசிய நெடுஞ்சாலையாக உள்ள சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. சாதாரண நாட்களிலேயே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.பண்டிகை, தொடர் விடுமுறை நாட்களில் மணிக்கணக்காக போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கிக் கொள்கின்றன.
இதனைத் தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசல், விபத்து, உயிரிழப்புகளைத் தவிா்க்கவும், பயண நேரத்தைக் குறைக்கவும், தற்போதுள்ள நான்கு வழிச் சாலையை, பசுமை வழி விரைவுச் சாலை எனப்படும் 8 வழி அதிவிரைவு சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.இதனைத்தொடா்ந்து மதுரை வரையும் 8 வழிச்சாலையாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனுடன் அவசர சேவை நிலையங்கள், ஓய்வு இடங்கள், பிற சாலை சேவைகளும் இதில் நிறைவேற்றப்பட உள்ளன. ரூ. 26,500 கோடி செலவில் அமைய இருக்கும் இந்த 8 வழிச்சாலை சென்னையை அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலிலிருந்து தொடங்குகிறது.
இதற்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கும் நிலையில், சாலை வளைவுகள், அதிக விபத்து ஏற்படும் பகுதிகள், கூடுதல் மேம்பாலங்கள், சாலைகள் அமைக்க நிலம் எடுப்பு போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. சாலை விரிவாக்க பணிகள் முடிந்த பின்னா், இற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசின் அனுமதி பெற்று விரைவில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் சாலை செயல்பாட்டுக்கு வரும்போது, சென்னை - திருச்சி இடையே 310 கி.மீ. தொலைவு பயண நேரம் 6 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரமாக குறையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!