இன்று முதல் அக்.18 வரை சென்னை - விழுப்புரம் பயணிகள் ரயில் பகுதியாக ரத்து!

 
எக்ஸ்பிரஸ் ரயில்

இன்று முதல் விழுப்புரம்–சென்னை ரெயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சில பயணிகள் ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

ரயில் தண்டவாளம் ரயில்வே பராமரிப்பு

சென்னை எழும்பூர்–விழுப்புரம் இடையே உள்ள முண்டியம்பாக்கம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனால் இன்று அக்.14ம் தேதி முதல் வருகிற அக்.18ம் தேதி வரையில் சில பயணிகள் ரெயில்கள் இயங்காது எனவும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

ரயில் எக்ஸ்பிரஸ்

அதன்படி தாம்பரத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயில் திண்டிவனம்–விழுப்புரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், விழுப்புரத்தில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை நோக்கிச் செல்லும் பயணிகள் ரெயில் விழுப்புரம்–திண்டிவனம் இடையே ரத்து செய்யப்படுகிறது. பணிகள் முடிந்தவுடன் வழக்கம்போல் சேவை மீண்டும் தொடங்கும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?