செக் மோசடி வழக்கு.. கல்லூரி பேராசிரியைக்கு 6 மாதம் சிறை தண்டனை!

 
பாலியல் பலாத்காரம் செக்ஸ் இளம்பெண்

செக் மோசடி வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்த கல்லூரி உதவி பேராசிரியைக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சாத்தான்குளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

மோசடி

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் இஸ்ரவேல் (45). இவர், நாசரேத் பகுதியில் உள்ள கல்லூரியில் கேண்டீன் நடத்தி வந்தார். அப்போது அந்த கல்லூரியில் பணியாற்றி வரும் உதவி பேராசிரியை கீதாஞ்சலி என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில் அவருக்கு இஸ்ரவேல் ரூ.3.80 லட்சம் கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பணத்திற்கு ஈடாக பேராசிரியை கீதாஞ்சலி, பின்தேதியிட்டு அளித்த வங்கி காசோலையை, அவரது வங்கி கணக்கில் செலுத்திய போது போதிய பணம் இல்லாமல் திரும்பியது. 

தூத்துக்குடி

இதையடுத்து செக் மோசடி தொடர்பாக கீதாஞ்சலி மீது சாத்தான்குளம் நீதிமன்றத்தில் இஸ்ரவேல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வரதராஜன், செக் மோசடி தொடர்பாக கல்லூரி உதவி பேராசிரியை கீதாஞ்சலிக்கு 6 மாதம் சாதாரண தண்டனை விதித்தும், கடன் தொகையை 2 மாத காலத்திற்குள் 9 சதவீத வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் மேலும் 3 மாதம் சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web