விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து... முதல்வர் ரூ4லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

 
பட்டாசு


 
விருதுநகர் மாவட்டத்தில்  சாத்தூர் அப்பையநாயக்கன்பட்டி பகுதியில்  தனியார் பட்டாசு ஆலையில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் அங்கிருந்த 4 அறைகள் முற்றிலும் தரைமட்டமாகியுள்ளன.

இந்நிலையில், இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு இருப்பதாகவும்  மேலும் இருவர் படுகாயமடைந்து இருப்பதகாவும்  தகவல் வெளியாகியுள்ளது. புத்தாண்டின்  முதல் வாரத்திலேயே நிகழ்ந்த இந்த சோக சம்பவம் பட்டாசு தொழிலாளர்களை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது.

பட்டாசு விபத்து


இந்த விபத்தை தொடர்ந்து வேலைக்கு வருகை தந்தரவர்கள் யார் என்பதற்கான வருகை பதிவேடுவை சேகரிக்கும் பணியையும், விபத்து ஏற்பட்ட காரணம் பற்றியும் விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 4 லட்சமும்  , படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ ஒரு லட்சம்  நிவாரணமும் வழங்கி தமிழ்நாடு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web