பிரபல மருத்துவர் கே.எம்.செரியன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

 
செரியன்


 
உலக புகழ்பெற்ற மருத்துவர் கே.எம்.செரியன் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் காலமானார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செரியன்  மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.  

இது குறித்து அவர் தனது  எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ ஃபிரான்டியர் லைஃப்லைன் மருத்துவமனையின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியும், இதய மாற்று அறுவை சிகிச்சையில் உலகளவில் புகழ்பெற்ற மருத்துவருமான கே.எம்.செரியன் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்

இதய மாற்று அறுவை சிகிச்சையில் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றியது மற்றும் மருத்துவத் துறையில் அவரது பணி பலருக்கும் உத்வேகம் அளித்தது. அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். அவரது பங்களிப்புகள் பல மருத்துவர்களுக்கு மருத்துவத்தில் சிறந்து விளங்க தொடர்ந்து ஊக்கமளிக்கும்” என  பதிவிட்டுள்ளார்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web