பத்மஸ்ரீ மருத்துவர் மாதங்கி ராமகிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
புகழ்பெற்ற ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை நிபுணர் ‘பத்மஸ்ரீ’ டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை மருத்துவக் கல்லூரியில் தங்கப்பதக்கங்களுடன் பட்டம் பெற்ற அவர், மருத்துவத் துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சிறந்த நிபுணராகத் திகழ்ந்தார் என்று முதல்வர் கூறியுள்ளார்.
மாதங்கி ராமகிருஷ்ணன், ஒட்டுறுப்பு அறுவை மருத்துவத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்று, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் தீவிர தீப்புண் சிகிச்சைப் பிரிவை தொடங்குவதில் முக்கிய பங்காற்றியவர். அவரின் பணிக்கு அங்கீகாரமாக பத்மஸ்ரீ, டாக்டர் பி.சி. ராய் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் அவ்வையார் விருது உள்ளிட்ட பல பெருமைகள் வழங்கப்பட்டன.
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி துறைத் தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக மிகைநிலைப் பேராசிரியர், மத்தியத் தோல் ஆராய்ச்சி நிறுவன மிகைநிலை அறிவியலாளர் உள்ளிட்ட பதவிகளில் திறம்படச் செயல்பட்ட மாதங்கி ராமகிருஷ்ணன், சேவையுடன் கலந்த வாழ்க்கையை வாழ்ந்தவர் என முதல்வர் தெரிவித்தார். அவரின் மகள் மருத்துவர் ப்ரியா மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
