3 வது முறையாக ஆட்சியை பிடித்த ஹேமந்த் சோரனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

 
ஸ்டாலின் ஹேமந்த் சோரன்


 இந்தியாவில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்று இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தமிழக முதல்வர்  ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து ஸ்டாலின்  ”ஜார்க்கண்ட் மாநிலத்தில் அனைத்துத் தடைகளையும் கடந்து வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ள ஹேமந்த் சோரனுக்கும், நமது இந்தியா கூட்டணிக்கும் எனது வாழ்த்துகள். அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்துவது, பழிவாங்கும் அரசியல் மற்றும் பல தடைகளைக் கடந்த 5 ஆண்டுகளில் பாஜக உருவாக்கினாலும் - அத்தனையையும் துணிச்சலுடனும் உறுதியுடனும் எதிர்த்து நின்று ஹேமந்த் சோரன் வென்றுள்ளார்.

ஹேமந்த் சோரன்

அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் அவரது தலைமையில் தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை ஜார்க்கண்ட் மக்கள் தேர்தல் முடிவுகளில் வெளிப்படுத்தியுள்ளனர். இது மக்களாட்சிக்கும் மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி!.” என பதிவிட்டுள்ளார்.  
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி பாஜக தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி, 3 வது முறையாக ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web